தனுஷின் திட்டங்களால் பாதிக்கப்படும் செல்வராகவன்!

entertainment

இந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் என இரண்டு படங்கள் தனுஷுக்கு வெளியாகிவிட்டது. ஒன்று சாதகமாகவும், மற்றொன்று பாதகமாகவும் தனுஷுக்கு அமைந்துவிட்டது. இந்த வருடத்தின் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது ரிலீஸாக ‘அட்ராங்கி ரே’ இருக்கும். பாலிவுட் நடிகர்களான அக்‌ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து தனுஷ் நடித்திருக்கிறார்.

அடுத்ததாக, தனுஷுக்கு உருவாகிவரும் படம் ‘டி 43’. தனுஷ் நடிக்கும் இந்த 43ஆவது படத்தை கார்த்திக் நரேன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த வருடத்துக்குள் முழு படமும் தயாராகிவிடும்.

இந்தப் படம் முடிந்த கையோடு, தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தைத் தொடங்க திட்டமிட்டிருந்தார் தனுஷ். செல்வா படத்துக்கு முன்பாக, ஷார்ட் டைமில் முடிப்பதுபோல ஒரு கதையை கையில் எடுக்க விரும்பினார். அதனால், மாரி இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்திலும் நடிக்க திட்டமிட்டார்.

இந்த நிலையில், புது அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க களமிறங்கியிருக்கிறார். தெலுங்கு இயக்குநர் ஷேகர் கம்முலா இயக்க, தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறார் தனுஷ். எக்கச்சக்க இயக்குநர்கள் லைன் அப்பில் இருக்கும்போது, தெலுங்கு இயக்குநரையும் கமிட் செய்ய என்ன காரணம் என விசாரித்தால் பெரும் தொகை சம்பளமாகப் பேசப்பட்டிருக்கிறதாம். அதோடு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படம் உருவாக இருக்கிறது. PAN இந்தியா திரைப்படமாக வெளியாவது தனுஷுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டைத் தரும். PAN இந்தியா நடிகராவது பெருமையும்கூட. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டே தெலுங்கு பட அறிவிப்பு.

இந்தத் தெலுங்கு பட அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப்படுவது தனுஷின் சகோதரரும், இயக்குநருமான செல்வராகவன்தானாம். தனுஷ் 43 முடிந்ததும், தெலுங்கு படம் தொடங்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அப்படியென்றால், தனுஷுக்காகக் காத்திருக்கும் செல்வராகவன் படம் தள்ளிப்போகும். இது, செல்வாவுக்கு பேரதிர்ச்சி என்கிறார்கள். தனுஷின் புதுப்புது திட்டங்களால் படம் தள்ளிப்போவதால் கொஞ்சம் மன வருத்தத்துடன் இருக்கிறாராம். செல்வா இல்லையென்றால் தனுஷ் இல்லை. தனுஷை நடிகராக செதுக்கியவர் செல்வராகவன். தனுஷுக்கான சினிமாவைக் கட்டமைத்தது செல்வாதான். ஆனால், அவர் படத்தில் நடிக்க காலம் தாழ்த்திவருகிறார் தனுஷ் என்றும் சொல்கிறார்கள்.

டி 43, நானே வருவேன், சேகர் கம்முலா படங்கள் மட்டுமின்றி, ராட்சசன் இயக்குநர் ராம்குமார், வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்கவும் உறுதியளித்துள்ளார். இந்தப் படங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

**- தீரன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *