�
தனுஷின் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் பட்டாஸ் திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் பட்டாஸ். இந்தப்படத்தில், கொடி திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா-மகன் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவருக்கு ஜோடியாக சினேகாவும், மெஹ்ரீன் பிர்சடாவும் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப்படத்தைத் தயாரித்துள்ளது. இதில் நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தில் இடம்பெறும் சில் ப்ரோ, மொரட்டுத் தமிழன், ஜிகிடி கில்லாடி போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் ஜிகிடி கில்லாடி பாடலை அனிருத் பாடியுள்ளார். இதன் மூலமாக நான்கு வருடங்களுக்குப் பின்னர் தனுஷ், அனிருத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் பட்டாஸ் திரைப்படத்தின் பாடல்கள் அடங்கிய ஜூக்போக்ஸ் நேற்று(டிசம்பர் 28) வெளியிடப்பட்டது. அதில்,
*புது சூரியன்*
*சில் ப்ரோ*
*ஜிகிடி கில்லாடி*
*மொரட்டுத் தமிழன்*
*பிரியாத என்ன*
என ஐந்து பாடல்களும், மதர்ஸ் லவ் பீஜிஎம்மும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பட்டாஸ் திரைப்படம் வரும் ஜனவரி 16-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.�,”