Nமுடிவுக்கு வந்த கண்ணாமூச்சி!

entertainment

நடிகர் தனுஷும், நடிகை மாளவிகா மோகனனும் நீண்ட நாட்களாக ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை நடத்தி வந்தனர். அது, தனுஷின் 43ஆவது திரைப்படத்துடன் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆம், தனுஷின் 43ஆவது திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதனை, மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். எங்கே தொடங்கியது இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?

தனுஷின் 37ஆவது பிறந்தநாள் கடந்த ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய மாளவிகா மோகனன் “உங்களோடு வேலை செய்வதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். நம் இருவரையும் ஒன்றாக படத்தில் நடிக்கவைக்க யாராவது முயற்சி செய்வார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார். ஒரு நடிகருடன் நடிக்க விருப்பப்படுவதை, இவ்வளவு வெளிப்படையாக எந்த நடிகையும் கூறி இதுவரை சினிமாவில் கண்டதில்லை. காரணம், பேட்ட படத்தில் ரஜினியுடன், மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் என ஜோடி சேர்ந்து மாளவிகாவின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. எனவே, விஷயம் இல்லாமல் மாளவிகா இப்படி பேசியிருக்க மாட்டாரோ என ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருந்தபோதே, “நன்றி. நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என தனுஷ் மாளவிகாவுக்கு பதிலளித்தார். கிட்டத்தட்ட இருவரும் ஒன்றாக நடிப்பது உறுதியாகிவிட்டாலும், எந்த இயக்குநர் படத்தில் இவர்கள் நடிக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் தனுஷின் 43ஆவது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். துருவங்கள் 16, மாஃபியா ஆகிய படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் டிரெண்டிங் இயக்குநராக இருக்கும் கார்த்திக் நரேனின் நரகாசூரன் திரைப்படம் இன்னும் ரிலீஸாகாமல் இருக்கிறது. கௌதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், அந்தத் திரைப்படம் நின்று போனாலும் மற்ற தயாரிப்பாளர்கள் கார்த்திக் நரேனுக்கு வாய்ப்பளிக்க தயங்கவில்லை. இப்போது தனுஷிடம் கதை சொல்லி ஓகே செய்திருப்பதால், 2021ஆம் ஆண்டில் எதிர்பார்க்கவேண்டிய முக்கியமான படங்களில் ஒன்றாக தனுஷின் 43ஆவது திரைப்படம் உருவாகியிருக்கிறது.

-முத்து-�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *