அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

entertainment

நடிகர் தனுஷ் தனது வாழ்க்கை துணைவி ஐஸ்வர்யாவுடனான திருமண உறவிலிருந்து விலகுவதாக அறிவித்தபின் பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ரஜினி காந்த் ரசிகர்களால் தனுஷின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றி புதிய புதிய தகவல்கள் தினந்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருவதால் அவரது திரையுலகை வாழ்க்கை பாதிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.

ஏற்கனவே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விட்டு சமந்தா பிரிவதாக அறிவித்தவுடன் அவருக்கும் இதே போன்று தான் கூறப்பட்டது. ஆனால் திரைப்பட வாய்ப்புகள், சம்பளத்தில் புதிய உச்சத்தை எட்டினார் சமந்தா.

அதேபோன்று நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிப்பதில் தமிழ்மொழி கடந்து இந்தி, ஆங்கிலப்படங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் இந்தியில் தயாரிக்கப்பட்ட அத்ரங்கி ரே’ படத்தின் வெற்றியால் மேலும் இரண்டு இந்தி படங்களில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2013-ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் – தனுஷ் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் வெளியான ‘ராஞ்சனா’ படம் பெரும் வெற்றி பெற்றது. இதே கூட்டணி மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘அத்ரங்கி ரே’ படத்துக்காக இணைந்தது. இதில் அக்‌ஷய் குமார், சாரா அலி கான் இவர்களுடன் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ‘ராஞ்சனா’வைப் போன்றே இதுவும் ஒரு முக்கோண காதல் கதையாக வலைத்தளத்தில் வெளியாகி வெற்றிபெற்றதுடன் விமர்சகர்களால் தனுஷ் நடிப்பு பாராட்டப்பட்டது.

ராஞ்சனா ‘அத்ரங்கி ரே’ படத்தின் வெற்றியால் அதே கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என இந்தி திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது இந்தப் படத்தில் ஆனந்த் எல்.ராய் இயக்குநர் பொறுப்புடன் தயாரிப்பையும் மேற்கொள்ளவிருக்கிறார். ஆனந்த் எல்.ராய்யின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கலர் எல்லோ புரொடக்‌ஷனின் கீழ் தனுஷ் நடிக்கும் படத்தை தயாரித்து இயக்கவுள்ளார் என்றும், இந்தப் படம் ஆக்‌ஷன் பிளஸ் காதல் படமாக இருக்கும் என்றும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்ரங்கி ரே படத்தின் வெற்றியை உறுதிப்படுத்திய சில நாட்களிலேயே இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும். விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.