நடன இயக்குநராக இருந்த ராகவா லாரன்ஸை நடிகராக அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது முனி படம்தான். முனி கொடுத்த பெரிய வெற்றியினால், அடுத்தடுத்து பாகங்கள் வெளியானது.
2007இல் வெளியான முனி படத்தில் ராஜ்கிரண் முனியாக நடித்திருப்பார். அந்தப் படம் கொடுத்த ஹிட்டினால், 2011இல் முனி இரண்டாம் பாகமாக காஞ்சனா படம் வெளியானது. இதில் காஞ்சனா ரோலில் திருநங்கையாக சரத்குமார் கலக்கியிருப்பார். காஞ்சனா எனும் பிராண்டு பிரபலமானதற்கு காரணம் சரத்குமார் தான்.
இந்தப் படத்துக்குப் பிறகு ராகவா லாரன்ஸும் சரத்குமாரும் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. தற்போது, இக்கூட்டணி மீண்டும் இணைகிறது. தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ருத்ரன்’. இந்தப் படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.
காஞ்சனாவில் இருவரும் இணைந்து நடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது. இந்தப் படத்தில் இருவருக்குமான காட்சிகள் இருக்கும். அதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவி வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் மட்டுமின்றி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துவருகிறார் சரத்குமார்.
காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் சமீபத்தில் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திருநங்கையாக அக்ஷய்குமார் நடித்திருந்தார். ஆனால், படம் படு தோல்வி. சரத்குமாருக்கு தமிழில் கிடைத்த ரெஸ்பான்ஸ் பாலிவுட்டில் அக்ஷய்க்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி**�,