Z‘சிஎஸ்கே’வுக்கு மாஸ்டரின் பதில்!

Published On:

| By Balaji

‘மாஸ்டர்’ திரைப்படத்தைக் குறிப்பிட்டு சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் இடப்பட்டுள்ள ட்வீட்டும், அதற்கு மாஸ்டர் படக்குழுவின் பதிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே ‘குட்டி ஸ்டோரி’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 10) வெளியான ‘வாத்தி கமிங்’ பாடலும் சில மணி நேரங்களிலேயே முப்பத்தைந்து லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

மார்ச் 15ஆம் தேதி நேரலையில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத் துறையினர் வரை அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் மாஸ்டர் படத்தைக் குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவும் கவனம் ஈர்த்துள்ளது.

அந்தப் பதிவில், இந்திய கிரிக்கெட் வீரர்களான ரெய்னா சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘லைஃப் இஸ் வெர்ரி ஷார்ட் நண்பா, ஆல்வேய்ஸ் பி ஹேப்பி’ என்று குட்டி ஸ்டோரி பாடலின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் மாஸ்டர் விஜய் என்றும் விசில் போடு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கு மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், ‘ஃப்ரெண்ட்ஸா நின்னா பவர்ஃபுல் மாப்பி, கொஞ்சம் சில் பண்ணு பேபி’ என்று பதிலளித்துள்ளனர். ‘சிஎஸ்கே’யின் பதிவும், மாஸ்டர் குழுவினரின் பதிலும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share