‘குக் வித் கோமாளி’- இரண்டு வைல்ட் கார்டு எண்ட்ரி; யார் தெரியுமா?

entertainment

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இரண்டு பேர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்துள்ளனர்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சிவாங்கி, மணிமேகலை, ஷரத், பாலா, சுனிதா என வழக்கமான கோமாளிகளோடு இந்த சீசனில் அந்தோணி தாசன், வித்யுலேகா, மனோபாலா, ரோஷினி, அம்மு அபிராமி, சார்பட்டா’ பட புகழ் சந்தோஷ் உள்ளிட்ட பலர் செஃபாக களம் இறங்கினர்.

நிகழ்ச்சி தொடங்கி நான்கு மாதங்கள் ஆகி விட்ட நிலையிலும் இந்த சீசனில் நான்கு எலிமினேஷன் தான் இது வரை நடந்திருக்கிறது. ராகுல் தாத்தா, அந்தோணி தாசன், மனோபாலா கடந்த வாரம் ‘சார்பட்டா’ சந்தோஷ் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

அம்மு அபிராமிக்கும் சந்தோஷூக்கும் நடந்த ‘ஒன் ஒன்’ சுற்றில் தான் சந்தோஷ் வெளியேறினார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவது வருத்தமாக இருந்தாலும் இந்த பயணம் தனக்கு பிடித்திருக்கிறது எனவும் வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வரும் போது நிச்சயம் இதை விட சிறப்பாக செயல்படுவேன் எனவும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இரண்டு பேர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ளனர். அதே ‘சார்பட்டா’ படத்தில் வில்லனாக நடித்த முத்துக்குமார் மற்றும் ‘ப்ளாக்‌ஷீப்’ சுட்டி அரவிந்த் ஆகிய இருவர் தான் அது.

வில்லன், காமெடியன், குண சித்திர கதாப்பாத்திரங்கள் என இதில் நடித்து இவர்களை பார்த்திருப்போம். ஆனால், சமையல் நிகழ்ச்சியில் இவர்கள் எப்படி சமைக்க போகிறார்கள், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஃபன் கண்டெண்ட்டுக்கு ஏற்றாற் போல இருப்பார்களா என்பதெல்லாம் இனி வரும் எபிசோட்களில் தெரிய வரும்.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0