‘மாஸ்டர் செஃப் தமிழ்’ மீது மோசடி புகார் : காரணம்?

Published On:

| By admin

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ நிகழ்ச்சி மீது மோசடி புகார் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி முதன் முறையாக தொகுத்து வழங்கிய சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப் தமிழ்’. உலக அளவில் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சி கடந்த வருடம் தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கினார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு இது போட்டியாக பார்க்கப்பட்டாலும் வரவேற்பு ரசிகர்களிடம் கலவையாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இளைஞர்களில் இருந்து வயதானவர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும் இரண்டாவது சீசனும் விரைவில் ஒளிபரப்பாகும் எனவும் ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ குழு அறிவித்து இருந்தது.

அந்த வகையில் முதல் சீசனின் இறுதியில் தேவகி, கிருத்திகா, நித்யா மற்றும் வின்னி ஆகிய நான்கு பேர் வந்தார்கள். இதில் தேவகி ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ பட்டத்தை வென்றார்.

மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கான செலவுகளை ஏற்கும் என நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே போட்டியாளர்களிடம் தெரிவித்திருக்கிறது.

ஆனால், நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் ஆன நிலையில் அந்த செலவு தொகை இன்னும் வரவில்லை என இப்பொழுது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் சன் தொலைகாட்சி தரப்பு தெளிவுப்படுத்தும் என எதிர்ப்பார்க்கலாம்.

*ஆதிரா.*

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share