தமிழின் பிரபல நகைச்சுவை நடிகர் சூரியின் மகன் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் வாரிசுகளும் நடிகர், நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பலரது வாரிசுகள் விளையாட்டு, கல்வி போன்றவற்றிலும் சாதனை புரிந்து பெற்றோருக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரியின் மகனும் விளையாட்டுத்துறையில் சிறப்பான இடத்தைப் பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
சூரியின் மகன் சஞ்சய், இவர் மதுரை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடத்தப்பட்ட பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்துள்ளார். அந்தப் போட்டியில் திறம்பட விளையாடிய சஞ்சய் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் விருதையும் பெற்றுள்ளார். சிறப்பாக விளையாடிய அவருக்குப் போட்டியை நேரில் காண வந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் சூரி பகிர்ந்துள்ளார். சூரியின் மகனுக்குப் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
�,”