சினி ஜங்ஷன் : தனுஷ் படத்தில் மாற்றம்… இன்று வெளியாகும் புதுப்படம் !

entertainment

கோலிவுட்டில் துவங்கி ஹாலிவுட் வரை சினிமாவில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகள், உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை புதுப்புது படங்களின் ஆச்சர்யமூட்டும் அப்டேட்டுகள், தியேட்டர் ரிலீஸ் முதல் ஒடிடி ரிலீஸ் வரை என ஒவ்வொரு நாளும் நடக்கும் சுவாரஸ்ய சினிமா செய்திகளின் தொகுப்பு சினி ஜங்ஷன்.

**விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்**

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகிவரும் படம் விக்ரம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, படத்துக்கான லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்தப் புகைப்படங்களை வைத்து, விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் இருவரும் டெட்லி வில்லன்களாக படத்தில் நடிக்கிறார்கள். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவிலேயே படத்தின் படப்பிடிப்புத் துவங்க இருக்கிறது.

**சிபிராஜ் அட்வைஸ்**

கடந்த மே 1ஆம் தேதி முதல் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்துதல் மக்கள் மத்தியில் தீவிரமடைந்தது. திரை பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அறிவித்து வந்தனர். அந்த வரிசையில், நடிகர் சிபிராஜ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். முக்கியமான விஷயம் என்னவென்றால், ரஷ்யாவிலிருந்து வந்திருக்கும் ஸ்புட்னிக் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார் சிபிராஜ். அதோடு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

**டைட்டில் மாற்றம் ?**

ஹாலிவுட் திரைப்படமான க்ரே மேன் ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய தனுஷ், தற்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படத்தை முடித்தக் கையோடு மித்ரன் ஜவகர் இயக்கும் சன்பிக்சர்ஸின் திரைப்படத்தையும், செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பையும் துவங்க இருக்கிறார். இதில், நானே வருவேன் ஷூட்டிங் ஆகஸ்ட் 20ல் துவங்க இருக்கிறது. இந்நிலையில், படத்தின் டைட்டிலை மாற்றுவது குறித்து இயக்குநர் யோசித்து வருகிறாராம். இந்த டைட்டில் மாஸாக இல்லையென்பதால் மாற்ற அறிவுறுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. படப்பிடிப்பு துவங்கும் போது டைட்டில் அப்டேட் எதிர்பார்க்கலாம்.

**டிவியில் இன்று…!**

சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகிபாபு,ஆத்மியா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வெள்ளையானை.முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படம் தயாராகி ஒரு வருடத்துக்கு மேலாகிறது. திரையரங்குகள் மூடியிருப்பதால் படம் வெளியாவதில் பல சிரமங்களை சந்தித்தது. இறுதியாக, இப்படம் சன் டிவியில் நேரடியாக இன்று மாலை 3.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஏற்கெனவே, சன் டிவியில் நேரடியாக வெளியான புலிக்குத்திப் பாண்டி படம் செம ரீச். அந்த வரிசையில் வெள்ளையானையும் நேரடியாக டிவியில் வெளியாகிறது.

**இறுதிக்கட்டத்தில் ‘விடுதலை’**

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உருவாகிவரும் படம் விடுதலை. விஜய்சேதுபதி, கெளதம் மேனன் இருவரும் முக்கிய லீட் ரோலில் நடித்துவருகிறார்கள். படத்துக்கு இசை இளையராஜா. ஒளிப்பதிவு வேல்ராஜ். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. தற்பொழுது, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு செங்கல்பட்டு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை வேகமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார் வெற்றிமாறன். ஏனெனில், இந்தப் படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் விரைவில் துவங்க இருக்கிறது.

**பாகுபலிக்கு வயது ஆறு**

இப்படியொரு பிரம்மாண்டத்தைத் திரை மொழியில் காட்டிவிட முடியுமா என்று அதிசயத்தை கண்முன் நிறுத்திய படம் பாகுபலி. பாகுபலியை ஏன் கொன்றார் கட்டப்பா எனும் ஒற்றைக் கேள்விக்காக அத்தனை ரசிகர்கள் கூட்டமும் காத்துக் கிடந்ததெல்லாம் வரலாறு. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் , அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி முதல் பாகம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. கிட்டத்தட்ட 180 கோடியில் உருவான இந்தப்படம் ஒட்டுமொத்தமாக 600 கோடிவரை வசூல் சாதனைப் படைத்தது. ஜெய் மகிழ்மதி!

**மாநாடு முடிந்தது**

இந்த வருடம் சிம்புவுக்கு முதல் ரிலீஸ் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் பெரிதளவு வசூல் சாதனை பெறவில்லையென்றாலும், சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. அடுத்ததாக,வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு தயாராகிவருகிறது. கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்க அரசியல் திரைப்படமாக தயாராகிவருகிறது. மாநாடு துவங்குவதற்குள் மகாமாநாடு வரை பல சம்பவங்களைச் சந்தித்தது. ஒருவழியாக, மாநாடு ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டது. இந்தத் தகவலை படக்குழு உறுதியும் செய்துள்ளது. தவிர, படக்குழுவினருக்கு அன்பை வெளிப்படுத்தும் வகையில் விலையுயர்ந்த வாட்ச் பரிசாக வழங்கியுள்ளார் சிம்பு.

**நம்பிக்கையூட்டும் வாழ்**

அருவி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். இவரது இரண்டாவது படைப்பு ‘வாழ்’. பிரதீப், பானு, திவ்யா மற்றும் யாத்ரா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படமானது சோனி லிவ் ஓடிடியில் வருகிற ஜூலை 16ஆம் தேதி நேரடியாக வெளியாக இருக்கிறது.

**- ஆதினி**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *