இந்தியாவுக்குள் கொரோனா வைரஸ் வந்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட சார்மிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சீன நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களைக் கடந்து இப்போது இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் ஏற்பட்டிருப்பது இந்திய மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகை சார்மி கொரோனா வைரஸ் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
Telugu actresss Charmi Kaur (originally from Punjab) welcomed corona virus with thums up and smiles … netizens fire On her.. pic.twitter.com/NBECmfXIMd
— Lokesh journo (@Lokeshpaila) March 2, 2020
தனது டிக் டாக் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “ஆல் த பெஸ்ட் நண்பர்களே, உங்களுக்குத் தெரியுமா கொரோனா வைரஸ் டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கும் வந்துவிட்டதாகச் செய்திகளில் பார்த்தேன். ஒருவழியாக கொரோனா இந்தியாவுக்குள்ளும் வந்து விட்டதே!” என்று உற்சாகத்துடன் சிரித்தவாறே பேசுகிறார்.
உலக மக்களின் உயிரைக் கொல்லும் இந்தத் துயரத்துக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக அவர் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டதோடு தனது தவற்றுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”