சினிமா தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றங்கள்!

entertainment

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திர போராட்ட காலத்தில் நாடகம், சினிமா இவற்றுக்கு சட்டத்தை அமுல்படுத்தியது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அதில் சில மாற்றங்களை செய்து 1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது. அதன் அடிப்படையில் சினிமா தியேட்டர்களில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு மத்திய திரைப்பட தணிக்கைத் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும்.

தணிக்கை குழு படத்தை பார்த்து அவற்றிற்கு U, UA,Aஎன படத்தின் தன்மைக்கு ஏற்ப சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இப்போது இந்த சான்றிதழ் முறையில் சிறு மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக 1952ம் ஆண்டு சினிமாட்டோகிராப் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி திரைப்படத் தணிக்கைத் துறையால் நிராகரிக்கப்படும் படங்களை திரைப்படத் தணிக்கை டிரிப்யூனலில் முறையிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தற்போது இந்த டிரிப்யூனல் அமைப்பை மத்திய அரசு கலைத்துவிட்டது.

மேலும்,UA சான்றிதழ் எனப்படுவது 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெற்றோர் துணையுடன் படம்பார்க்கலாம் என்பதாக இருந்தது. அதில் இனிமேல், UA 7 +, UA13+, UA16+ என மூன்று வகையான தணிக்கை சான்றிதழ்களை வழங்க மாற்றங்களைச் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

திரைப்பட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கலைக்கப்பட்டதற்கு திரைப்படத் துறையைச் சார்ந்த பலரும் பெயரளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், திரைப்பட துறைசார்ந்த அமைப்புகள் இதற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு பிற துறைகளுக்கு இருந்த தீர்ப்பாயங்களுடன் சேர்த்து சினிமா தீர்ப்பாயத்தையும் கலைத்துவிட்டது.

தணிக்கை சான்றிதழ் வழங்கபுதிய திருத்தங்கள் அமலாகும் போது அது குறித்து மேலும் கருத்துக்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

**-இராமானுஜம்**

.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.