விண்வெளியின் விளிம்புக்கு அழைத்துச் செல்லும் பலூன்கள்!

Published On:

| By Balaji

புளோரிடாவை தளமாகக் கொண்ட ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் விண்வெளியின் விளிம்பில் ஒரு சாகச பலூன் சவாரியை வழங்கவுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் இதற்கு முன்பு மிகக் குறைவான மனிதர்கள் மட்டுமே சென்ற இடத்திற்கு பலூன் சவாரிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. புளோரிடாவை தளமாகக் கொண்ட ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ், பூமியிலிருந்து விண்வெளியின் விளிம்பிற்கு பலூன் சவாரிகளைத் தொடங்க விரும்புகிறது என்று சி.என்.என் தெரிவித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் வாடிக்கையாளர்களை விண்வெளி விளிம்பிற்கு பறக்கும் ஸ்பேஸ்ஷிப் நெப்டியூன் என்ற மேம்பட்ட பலூனைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

The human space flight நிறுவனம் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விண்வெளி நெப்டியூனுக்கான சோதனை விமானத்தை இயக்கவுள்ளது. இதற்கான தளமாக அலாஸ்காவில் உள்ள பசிபிக் ஸ்பேஸ்போர்ட் வளாகத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சோதனை விமானத்தில் மனிதர்கள் அடங்கிய குழு இருக்காது என்றாலும், அடுத்த சில ஆண்டுகளில் வணிக விமானங்களைத் தொடங்கவிருப்பதாக இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் நம்புகிறது. பூமியின் வளிமண்டலத்தின் வெளிப்புற இடங்களுக்குச் செல்லும் காட்சிகள் ஒரு அழுத்தப்பட்ட காப்ஸ்யூலுக்குள் இருந்து பார்க்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக ‘ரெஃப்ரெஷ்மண்ட்’ பார் மற்றும் கழிவறை ஆகியவற்றை இது கொண்டிருக்கும்.

ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனர் ஜேன் பாய்ண்டர், “பூமியில் உள்ள வாழ்க்கைக்கு பயனளிப்பதற்கும், நமது கிரகத்தை நாம் எவ்வாறு பார்க்கிறோம் மற்றும் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதையும் கவனிக்கும் வகையில், விண்வெளியை நாம் இதுவரை பார்த்திருந்த வழியை மாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இன்று, பூமியை ஒரு கிரகமாகவும், அனைத்து மனிதர்களுக்குமான ஒரு விண்கலமாகவும், நமது உலகளாவிய உயிர்க்கோளமாகவும் பார்ப்பது முன் எப்போதையும் விட மிக முக்கியமானது”என்று கூறுகிறார். மேலும் இந்த பலூன் வடிவமைப்பு நாசா பல தசாப்தங்களாக ஆராய்ச்சிக்கான தொலைநோக்கிகளை பறக்க பயன்படுத்திய தொழில்நுட்பத்திலிருந்து பெறப்பட்டது என்று ஜேன் தெரிவித்துள்ளார்.

இதன் செயல்பாடுகள் தொடங்கும் போது, எட்டு பயணிகளையும் ஒரு விமானியையும் கொண்டு செல்லும் என்று அதன் வலைத்தளம் தெரிவித்துள்ளது. பலூனில் இருப்பவர்கள் 6 மணி நேர பயணத்தின் போது விண்வெளியின் விளிம்பிலிருந்து சூரிய உதயத்தின் அற்புதமான காட்சியைப் பெறலாம், பின்னர் மீண்டும் பூமிக்கு இறங்கலாம். பயணிகள் பூமியிலிருந்து சுமார் 19 மைல் (31 கிலோமீட்டர்) உயரத்தில், அதாவது சுமார் இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கும் போது அவர்கள் அனுபவத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் இடுகையிடவோ அல்லது புகைப்படங்களை, வீடியோக்களை அனுப்பவோ முடியும்.

**-முகேஷ் சுப்ரமணியம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share