இந்தியில் சூஜித் சர்கார் இயக்கத்தில் உருவாகி பெரிய ஹிட்டான படம் `பிங்க்’. அமிதாப் பச்சன், தாப்ஸி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கினார்.
தமிழில் அஜித் நடிக்க, ஹெச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ படமாக உருவானது. தமிழிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் வெர்ஷன் கொடுத்த நம்பிக்கையில் தெலுங்கில் ரீமேக் செய்யும் வேளையில் இறங்கினர் போனி கபூர். அப்படி, தெலுங்கில் தில் ராஜூ உடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர்.
தெலுங்கு வெர்ஷன் பிங்க் ரீமேக்கிற்கு ‘வக்கீல் சாப்’ என தலைப்பு வைத்துள்ளனர். ஹீரோவாக பவன் கல்யாண் நடிக்க, வேணு ஸ்ரீராம் படத்தை இயக்கியுள்ளார். அஞ்சலி, நிவேதா தாமஸ், அனன்யா நாகல்லா முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்தப்படம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ரிலீஸ் ஆகி பெரிய ஹிட்டும் ஆனது. வசூல் ரீதியாக பெரிய ஹிட்டா இருந்தாலும், விமர்சன ரீதியாக படத்தின் மேல் நெகட்டிவான கருத்துகளே முன்வைக்கப்பட்டது.
திரையரங்க ரிலீஸை தொடர்ந்து , ஓடிடிக்கும் படம் வர இருக்கிறது. இப்படம், பிரைம் வீடியோவில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனால், புதிய டிரெய்லர் கட் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.
**- ஆதினி**
.�,