இந்திய சினிமாவில் முக்கியமான நடன இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் பிருந்தா. இவர் இயக்கும் புதிய ஆக்சன் திரைப்படத்திற்கு ‘ தக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங்கு பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன் ஆகிய திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.
தக்ஸ்’ என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப் பின்னணி கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா. கதைக்கு ஏற்ற வகையில் நடிகர்களை தேர்வு செய்திருப்பதாக கூறினார். இந்தி நடிக ர்ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் பாபி சிம்ஹா, ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
**அம்பலவாணன்**