பிரபல யூட்யூப் சானலான பிளாக் ஷீப் தயாரிக்கும் திரைப்படத்தின் பூஜை மற்றும் முதல் நாள் படப்பிடிப்பு நேற்று(மார்ச் 11) நடைபெற்றது.
பெரும் எண்ணிக்கையிலான தமிழ் யூட்யூப் சானல்கள் மத்தியில் வித்தியாசமான வழிகளில் பயணித்து பிரபலமும் வெற்றியும் பெற்றவர்கள் ‘பிளாக் ஷீப்’ டீம். யூட்யூப் நட்சத்திரங்கள் பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், ஒரு யூட்யூப் சானல் சொந்த படத்தயாரிப்பில் களமிறங்கி இருப்பது சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தின் முதல் நாள் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், விவேக் பிரசன்னா, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். ‘பிளாக் ஷீப்’, ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை ‘புட்சட்னி’, ‘தமிழ் வணக்கம்’ யூட்யூப் சானல்கள் மூலம் பிரபலமான ராஜ்மோகன் இயக்குகிறார்.
இந்தத் திரைப்படத்தில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”