இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளார். கிராமி விருது பெற்றவர் 20 வயதேயான பாடகி பில்லி எலிஷ். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் ஒன்றான கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் நோ டைம் டூ டை. தனது சகோதரர் பினியஸ் ஒ கன்னல் உடன் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார் பில்லி எலிஷ்.
மிகச்சிறந்த இசைக்காக இந்தப் படத்தின் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கும் இந்தப் படம் பரிந்துரை செய்யப்பட்டது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அசல் பாடலுக்கான விருதை இவர்களது நோ டைம் டூ டை வென்றுள்ளது.
இசையமைத்த இருவருக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. 21ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆஸ்கர் விருது வென்ற முதல் நபராக மாறியுள்ளார் பில்லி எலிஷ். விருது அறிவிக்கப்பட்ட பின் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
**-இராமானுஜம்**
Fஆஸ்கர் விருது பெற்ற 2K கிட்!
+1
+1
+1
+1
+1
+1
+1