�
விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 3ம் தேதி முதல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஐந்தாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி காரணமாக பெரும்பான்மையான பார்வையாளர்களை கொண்டிருந்தது விஜய் தொலைக்காட்சி.
தமிழ் தொலைக்காட்சிகளில் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி. இவ்வாண்டில் அதனை முறியடித்து முதல் இடத்திற்கு வரும் முயற்சியை மேற்கொண்டிருந்தது விஜய் தொலைக்காட்சி . சன் தொலைக்காட்சி 1100 என்றால் விஜய் 950 என்று இருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் ஒளிபரப்பினால் சன் தொலைக்காட்சியை முந்திவிடலாம் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது பிக்பாஸ் சீசன் 5. பொதுவாக பிக்பாஸ் தொடங்கும் நாளில் 14 டிவிஆர் என்கிற எண் கிடைக்குமாம். வார நாட்களில் எட்டு என்று இருக்குமாம். ஆனால் இம்முறை தொடக்கநாளில் எட்டு மட்டும் கிடைத்ததாம். வார நாட்களில் நான்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறதாம். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தோல்வி அடைந்துவிட்டது என்கிறார்கள். இதன் விளைவாக விஜய் தொலைக்காட்சி அதிர்ச்சியும் சன் தொலைக்காட்சி மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறார்கள்.
**-இராமானுஜம்**
�,