கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில், ரேகா, சுரேஷ், ரம்யா பாண்டியன், கேப்ரியலா, சனம் ஷெட்டி, ஆஜித், நிஷா, ஷிவானி என 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் என பிக்பாஸ் வீடே களை கட்டியது.
அதோடு, வீட்டிலிருந்து இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதால் அதற்கான நாமினேஷனும் முன்பாக நடந்தது. இந்த நாமினேஷன் பட்டியலில் சனம், ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஆஜித் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் ஆஜித் எவிக்ஷன் ஃபிரீ பாஸ் பெற்றிருப்பதால், இவரைத் தவிர மீதம் இருப்பவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். அவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாகக் காத்திருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில், 17ஆவது போட்டியாளராக விஜே அர்ச்சனா என்ட்ரி கொடுத்துள்ளார்.
#Day11 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jQ9nuFzUFf
— Vijay Television (@vijaytelevision) October 15, 2020
ஆரம்பம் முதலே நிகழ்ச்சியில் அர்ச்சனா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் சில சட்டச் சிக்கல்கள் இருந்ததாகவும், அதனால்தான் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் இன்னும் வரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரமோ வீடியோ மூலம் அர்ச்சனா என்ட்ரி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
அந்தப் ப்ரமோ வீடியோவில், வீட்டுக்குள் வந்ததுமே அர்ச்சனா, சுரேஷை டார்கெட் செய்வதுபோல் உள்ளது. அதில், “எத்தனை பேருக்கு சாரின் சமையல் பிடிக்கவில்லை” என அர்ச்சனா கேட்க இதற்கு, “சமையல் மட்டும் தான் பிடிக்கும் அதனால் கையை தூக்க முடியவில்லை” என்று கூறுகிறார் ரியோ.
இதற்கு அர்ச்சனா, ‘எவன் அவன்’ என்று கேட்க, அதற்கு சுரேஷ், “சொன்னவனிடம் தான் கேட்கவேண்டும்” என்று பதிலளிக்கிறார்.
மேலும் அந்த ப்ரமோவில் அர்ச்சனா , “நீங்கள் (சுரேஷ்)பல வருஷமா தொகுப்பாளராக இருந்திருக்கணுமே…. என்ன ரியோ…” என கேட்க, குடும்பமே சுரேஷை கலாய்த்துச் சிரிக்கிறது. இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், இனிமேல்தான் ஆட்டம் சூடு பிடிக்கும் என பதிவிட்டு வருகின்றனர். அதே, சமயத்தில் ப்ரமோவை பார்த்து எதையும் சொல்ல முடியாது என்றும் கூறிவருகிறார்கள்.
**-பிரியா**�,”