Oபிக் பாஸ் 4: வழிமாறிப் போகிறதா?

Published On:

| By Balaji

படு ஜோராக பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் தனது முதல் பஞ்சாயத்தைத் தொடங்கிவிட்டார் கமல்ஹாசன். ஏழு நாட்களைக் கடந்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஒரு வாரத்தில் வீட்டுக்குள் நடைபெற்ற சண்டைகளின் ஆணி வேரையும், ஒவ்வொரு தரப்பு நியாயத்தையும் கேட்டு முடித்துவிட்டார். இதில், யார் யாரை இன்றைய (11.10.2020) நிகழ்ச்சியில் குறும்படங்கள் மூலமாகவும், குறுக்குக் கேள்விகளின் மூலமாகவும் மடக்கப்போகிறார் என்பதைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

உண்மையில் முதல் நாள் பஞ்சாயத்து ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அல்லது, பிக் பாஸின் முக்கியமான திட்டத்துக்கான விதைகள் இன்று தூவப்பட்டிருக்கிறதா என்பதும் தெரியவில்லை. அனிதா சம்பத் – சுரேஷ் மற்றும் சனம் ஷெட்டி – பாலாஜி ஆகிய இரு ஜோடிகளும்தான் முதல் வார சம்பவங்களின் முக்கியமான டார்கெட்டாக இருந்தனர். ஒவ்வொருவரும் மற்றவருக்கு சளைக்காமல் பிளேட்டை மாற்றிப் பேசுவதும், சமரசமின்றி போவதுமென பட்டாசாக நிகழ்ச்சியைக் கொண்டுசென்றனர். அனிதா – சுரேஷ் பிரச்சினை பெரிதாகப் போகுமென எதிர்பார்த்த ரசிகர்களை இருவரும் ஏமாற்றிவிட்டனர். ஆனால், எதிர்பாராதவிதமாக சனம் – பாலாஜி டீம் உள்ளே புகுந்து லைட்டை தங்கள் பக்கம் திருப்பினார்கள். சனம் ஷெட்டி பேசிய நீளமான வசனங்களினாலோ என்னவோ, நேற்றைய நிகழ்ச்சி போரடித்துப்போனது.

இன்று நடப்பதாக ஒளிபரப்பான புரோமோவில் சனம் – பாலாஜி ஜோடி மீண்டும் சண்டையைத் தொடங்கி, அதற்கு கமல் பஞ்சாயத்து செய்வது வெளியானது. எனவே, இன்றைய நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விறுவிறுப்பான நிகழ்வுகள் இல்லையென்றால், முதல் வார பிக் பாஸ் 4 நிகழ்ச்சி சொதப்பலில் முடிந்ததாகவே அர்த்தம். நல்லதொரு காரசாரமான சண்டை இல்லையென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதற்கான நோக்கமே வீணாகிவிடும். பார்த்து செய்யவும் பிக் பாஸ்.

-முத்து-�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share