கொடுப்பதை வச்சுதான் சமைக்கனும்… பிக்பாஸ் வீட்டுக்குள் ஆண்கள் கலக்கம்!

Published On:

| By Kumaresan M

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது களை கட்டியுள்ளது.  அக்டோபர் 15ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியானது. அதில் உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் சம்பாதித்த பணத்தை விட அதிகமாக செலவு செய்து விட்டதால் பிக் பாஸின் தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் அழுகையும், சண்டையும்தான் இருந்தது. இதை விஜய் சேதுபதி கடுமையாக கண்டித்தார்.

அதனால் இந்த வாரத்தில் போட்டியாளர்களின் மத்தியில் புது உத்வேகம் தெரிகிறது. அதற்கு தகுந்த மாதிரி நேற்று டாஸ்க்கும் சூப்பராக  கொடுக்கப்பட்டது. கயிற்றில் தொங்கி அதிக நேரம் நின்று கொண்டிருந்த சத்யா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இதைத்தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் நேற்று நடந்த உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் சம்பாதித்த எட்டாயிரம் பணத்தை விடவும் 12 ஆயிரத்திற்கு அவர்கள் செலவு செய்துள்ளனர்.

இதனால், இனி நான் கொடுக்கும் பொருட்களை தான் ஆண்கள் சமைக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவு போட்டுள்ளார்.  இதை கேட்டு அவர்கள் அணியில் பெண்களின் சார்பாக இடம் பெற்றுள்ள தர்ஷா குப்தா ,  உங்களுக்காக நானும் சாப்பிடாமல் இருக்கணுமா?  கடைசியில் இப்படி சொதப்பி வச்சிட்டீங்களே என்று திட்டினார். இதனால்,பிக் பாஸ் வீட்டுக்குள் ஆண்கள் அணியினர் கலங்கி போய் கிடக்கின்றனர்.

கடந்த வார நாமினேஷனில் இருந்து ரவீந்தர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.  இதைத்தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் ரஞ்சித், முத்துக்குமார், தர்ஷா குப்தா, ஜெப்ரி, சௌந்தர்யா, தீபக், ஜாக்குலின் போன்றவர்கள் கியூவில் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 விடிய விடிய கனமழை… நேற்று இரவு முதல் உறங்காமல் மழைக்களத்தில் உதயநிதி ஆய்வு!

தங்கை மீது மட்டும் பாசம்… சென்னையில் கொரிய மாணவரின் விபரீத முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel