சிறந்த படம் சூரரைப்போற்று : சிறந்த நடிகர் சூர்யா

entertainment

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் சூரரைப்போற்று. ஏர்டெக்கான் அதிபர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. விரைவில் இப்படம் இந்தியில் தயாரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதில் சூரரைப்போற்று உள்ளிட்ட பல இந்திய திரைப்படங்கள் திரையிட தேர்வாகி இருந்தன.

இப்பட விழாவில் சிறந்த படமாக சூரரைப்போற்று தேர்வாகி உள்ளது. அதோடு சிறந்த நடிகருக்கான விருதுக்கு சூர்யா தேர்வாகி உள்ளார். இது சூர்யா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்த ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர்.

இதே விழாவில் சமந்தா நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வலைதள தொடர் திரையிட தேர்வாகி இருந்தது. இதில் வலைதள தொடர் பிரிவில் சிறந்த நடிகையாக இந்த தொடரில் நடித்த சமந்தா தேர்வாகி உள்ளார்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.