q‘மனித கொரோனா’: கோபத்தில் நடிகர் பாலசரவணன்

entertainment

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பயத்தில் இருக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக ஹேண்ட் சானிட்டைசர் எனப்படும் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை வைரஸ் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் சில கடைகளில் முக கவசங்கள் மற்றும் ஹேண்ட் சானிட்டைசர்கள் போன்றவை வழக்கத்தை விடவும் அதிக விலைக்கு கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால் கடும் கோபம் அடைந்த நடிகர் பாலசரவணன், “கொரோனா வை விட ஆபத்தானவன் மனிதன்…மனிதகொரோனா” என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் ஹேண்ட் சானிட்டைசர் தீர்ந்து விட்டதால் அதனை வாங்குவதற்காக கடைக்கு போயிருந்தேன். அங்கு 60 ரூபாய் விலையுள்ள சானிட்டைசர் 135 ரூபாய் என்று கூறினார்கள். அது குறித்து பில் போடுபவரிடம் கேட்டதற்கு ‘நான் என்ன செய்ய முடியும். நான் இங்கே வேலைதான் பார்க்கிறேன்’ என்று கூறினார். நானும் அதனை வாங்கி வந்துட்டேன்.

இன்று எனது நண்பர்களுடன் காஃபி குடிக்கலாம் என்று ஒரு கடைக்கு சென்றிருந்தேன். அங்கு கைகளை சுத்தம் செய்ய சானிட்டைசர் கொடுத்தார்கள். அவர்களும் 75 ரூபாய் சானிட்டைசரை 110 ரூபாய் கொடுத்து அதிக விலைக்கு வாங்கி வைத்திருப்பதாகக் கூறினார்கள்.

என்னுடன் வந்த மற்ற நண்பர்களும் இதே போன்று அதிக விலைக்கு சானிட்டைசர் வாங்கியதாகக் கூறினார்கள்.

இதிலிருந்து மக்கள் அதிகமாக சானிட்டைசர், மாஸ்க் போன்ற பொருட்களை வாங்குகிறார்கள் என்று வேண்டுமென்றே இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இந்த மாதிரி அவசரமான ஒரு சூழ்நிலையில் லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக்கொள்வது எவ்வளவு கேவலம். கொரோனாவை விட மனிதன் தான் கொடூரமானவன். இந்த மாதிரி நேரங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைத்து கொடுக்கவேண்டும். காசு இல்லாதவர்கள் எப்படி அதை வாங்குவார்கள்.

இந்த ஊரில் இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சாதி ஒழியாது, ஏற்றத் தாழ்வு மாறாது, எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. ஒரு ஆணியும் புடுங்க முடியாது” என்று கோபத்துடன் பேசியுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *