இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்ட இயக்குநர் பார்த்திபன் தயாரித்து இயக்கியுள்ள ‘இரவின் நிழல்’ படத்தை ‘முதல் நான் -லீனியர் சிங்கிள் ஷாட்’ திரைப்படமாக ‘ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் அங்கீகரித்துள்ளன.
நடிகர் பார்த்திபன் ‘இரவின் நிழல்’ என்ற பெயரில், சிங்கிள் ஷாட் முறையில் ஒரு படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார். படத்தில் நடித்த 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 25 நாட்களாக ஒத்திகை பார்த்த பின்பு ஒரே நாளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்தப் படத்திற்கு ‘முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம்’ என்ற அங்கீகாரத்தை உலக அளவில் சாதனைகளைக் குறிப்பிடும் ‘ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் கொடுத்துள்ளன.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் சென்னையில் நடக்கவுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு இந்தக் கவுரவம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘இரவின் நிழல்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.‘ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இயக்குநர் ஆர்.பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இரு அமைப்புகளுக்கும் நன்றி கூறியுள்ளார்.
**அம்பலவாணன்**