பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் ஆர்யன்?

Published On:

| By admin

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து ஆர்யன் விலக இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிஆர்பியில் முதல் பத்து இடங்களுக்குள் வரும் சீரியல்களில் ஒன்றாக இது இருக்கிறது.

இந்த சீரியலில் செழியன் எனும் கதாப்பாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வருகிறார். வீட்டில் மூத்த பையனாக வரும் இவருடைய கதாப்பாத்திரம் தன் நலம் மட்டுமே யோசித்து குடும்பம் மீது அதிகம் அக்கறை இல்லாத ஒருவராக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இவருக்கு இது அறிமுக சீரியல். இந்த கதாப்பாத்திரமும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களிடையே பிரபலம். சமீபத்தில் ஆர்யனுக்கும் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியலின் கதாநாயகியான ஷபானாவுக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இவர் சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இவருக்கு குறைந்த காட்சிகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் இவர் சீரியலை விட்டு விலக ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் அங்கு ‘செம்பருத்தி’ சீரியலும் முடிவடையும் கட்டத்துக்கு நெருங்கி இருப்பதால் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலேயே அடுத்து ஆர்யன், ஷபானாவை ஜோடியாக்கி ஒரு சீரியல் தொடங்கவும் திட்டம் இருக்கிறதாம். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஆர்யன் சீரியலை விட்டு விலகுவது உறுதியானால் செழியன் கதாப்பாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share