Dஅஜித் வழியில் அருண்விஜய்

Published On:

| By Balaji

நடிகர் விஜயகுமார் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் இருபத்தி ஐந்து ஆண்டு கால தொடர் போராட்டங்களுக்கு பின்னர் வியாபார முக்கியத்துவம் உள்ள நடிகராக வளர்ந்திருப்பவர் அருண் விஜய். தனது மைத்துனர் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக ‘யானை’ படத்தில் நடித்து வருகிறார்.

முதல்முறையாக ஹரியுடன் அருண்விஜய் கூட்டணி அமைத்துள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதவிர இவரின் நடிப்பில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. யானை படப்பிடிப்பில் பணியாளர்களுக்கு சமைத்துக் கொடுத்ததை நெகிழ்வுடன் அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று இரவு படப்பிடிப்பின் போது என் குழுவினருக்கு சமைப்பது மகிழ்வாக இருந்தது… எனக்கு இடம் கொடுத்த அன்பான குடும்பத்திற்கு நன்றி… அவர்கள் தங்கள் அன்பில் மிகவும் பணக்காரர்களாகவும், பெருந்தன்மையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்… நாம் யார் என்பது முக்கியமல்ல. நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் ஒருவருக்கு ஒருவர் பரப்பும் கருணையும் அன்பும் தான்… அன்பைப் பரப்புங்கள்… இந்த அன்பான உள்ளங்கள் அனைத்தையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு முடிவடையும் போது படப்பிடிப்பில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நடிகர், நடிகைகள் உடைகள், தங்கத்திலான பொருட்களை வழங்கி சந்தோஷப்படுத்துவது அவ்வப்போது நடக்கும் இதில் இருந்து நடிகர் அஜித்குமார் வித்தியாசமாக உணவு சமைத்து பரிமாறுவது வழக்கம். அந்த வழியை அருண் விஜய் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.

**-அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share