ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

Published On:

| By Balaji

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானால் இந்தி திரையுலகில் நடிகர்களின் மறுபதிப்பாக இருக்கும் கலைஞர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

இந்திதிரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது. ஷாருக்கான் தன் மகன் மீது கவனம் வைத்து வளர்க்கவில்லை என அவரது ரசிகர்களிடையே ஒரு பிரிவினர் அவரை குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஷாருக்கான் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ராஜு என்பவருக்கும், ஹைதர் மக்பூல் என்பவருக்கும் தொழில் ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் வட இந்தியாவில் நடைபெறக்கூடிய கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் மேடை கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஷாருக்கான் போலவே பாடல்களுக்கு நடனமாடும் தொழில்முறை தெருக்கூத்து கலைஞர்களாவார்கள்.

இதன்மூலம் குறிப்பிடத்தக்க வருவாய் கிடைத்து வந்தது. வருடம் முழுவதும் வாய்ப்பு கிடைக்காது. குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இந்த வருவாய் கிடைக்கும் இந்த நிலையில் ஆர்யன்கான் விவகாரத்தில் ஷாருக்கான் தற்சமயம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் இந்த இருவரையும் தங்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவிர்க்க தொடங்கியுள்ளார்கள்.

கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கில் இருந்து தற்போதுதான் வட இந்திய மக்கள் மீண்டு வந்திருக்கிறார்கள். அதனால் விழாக்கள் நடக்க தொடங்கியுள்ள நிலையில் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், வருமான இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share