சிம்புவின் ‘பத்து தல’ படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்… நடந்தது எப்படி ?
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ஈஸ்வரன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தளர்வுக்குப் பிறகு படமாக்கப்பட்டு, படமும் தயாராகிவிட்டது.
பொங்கலுக்குக் குறிவைத்து பணிகள் நடந்துவரும் நிலையில், சிம்புவின் ஈஸ்வரன் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு போட்டியாக களமிறங்குகிறது சிம்புவின் ஈஸ்வரன். மாஸ்டர் 13ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படும் நிலையில், அடுத்த நாளான ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் வெளியாகும் என்கிறார்கள்.
கூடுதல் தகவல் என்னவென்றால், ஈஸ்வரன் படத்தில் சுசீந்திரனுடன் பணியாற்றியதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. சுசீந்திரனின் கதை சொல்லல், இயக்கம் உள்ளிட்ட பணிகளால் ஈர்த்துவிட்ட சிம்பு, மீண்டும் ஒரு படம் இணைந்து பண்ணலாம் என்று கூறியிருக்கிறார். அதனால், சுசீந்திரனும் ஒரு புதுக் கதையைச் சொன்னதாக தெரிகிறது. ஆக, மீண்டும் சிம்பு – சுசீந்திரன் கூட்டணி இணையலாம் என்கிறார்கள்.
சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மற்றுமொரு படம் தான் ‘பத்து தல’. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் உருவான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இது. பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, இனி துவங்காது என்று கருதப்பட்ட படம். இப்போது சிம்பு மாறிவிட்டதால், சிம்புவே பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்தப் படத்தில் புதிய இயக்குநராக சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இணைந்திருக்கிறார். இவர் இணைந்திருப்பதால், இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். எப்படி இது சாத்தியம் என்று விசாரித்தால், சில்லுனு ஒரு காதல் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அதோடு, இயக்குநர் கிருஷ்ணாவுக்கும் நண்பர். அதுமட்டுமல்லாமல், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிம்புவுடன் பணியாற்றுவது மிகவும் பிடிக்கும்.
விடிவி 2 படத்தின் முன்னோட்டமாக லாக்டவுனில் எடுத்த கார்த்திக் டயல் செய்த எண் படத்துக்கு நட்புமுறையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்தார். இப்போது, சிம்புவின் பத்து தல படத்துக்கு இசையமைக்கிறார். அதோடு, இந்தப் படத்தில் ஏ.ஆர்.ஆர். இசையில் பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-ஆதினி**�,