இந்திய சினிமாவுக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய பணியை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய சினிமாவின் மிகவும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை இன்று (டிசம்பர் 29) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சனுக்கு வழங்கினார். இதுவரை நான்கு முறை நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற அமிதாப் பச்சன், தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மற்ற மிகவும் மதிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ளார்.
1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி படத்தில் அறிமுகமான அமிதாப் பச்சனுக்கு, 1972ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சீர் திரைப்படம் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவதற்கு வித்திட்டது. 1984 இல் உ.பி மாநிலம் அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 68% வாக்குகளைப் பெற்று எம்பி.யானார். 1990களில் ஏபிசிஎல் சொந்தமாக படம் தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பித்து தன்னை வளர்த்த சினிமாவை தானும் வளர்த்தார் அமிதாப் பச்சன்.
2000ஆம் ஆண்டு முதல் ‘who wants to be a Millionaire?’ என்ற நிகழ்ச்சியின் இந்திய வெர்ஷனுக்கு தொகுப்பாளராக இருந்தார். 1969ஆம் ஆண்டு நடிப்பு துறைக்கு வந்த அமிதாப் கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிகு’ படத்திற்காக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதைப் பெற்றார்
தாதாசாகேப் பால்கே விருது வாங்கிய அமிதாப் பச்சனுக்கு திரையுலகு கலைஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். டிசம்பர் 23ஆம் தேதி நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் உடல்நிலை குறைவு காரணமாக அமிதாப் பச்சன் கலந்துகொள்ள முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.�,”