�
அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்துள்ள சைலன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் புரொடக்ஷனில் இருந்த இப்படம், ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்கு அவ்வப்போது உட்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் டிரெய்லர், அந்த ஒன்றரை வருடங்கள் ஏன் தேவைப்பட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
வாய் பேசமுடியாமல், காது கேட்காமல் இருக்கும் அனுஷ்காவை சுற்றி சில அமானுஷ்யமான விஷயங்கள் நடைபெறுகின்றன. அதன் பிரதிபலனாக சில கொலைகளும் நடைபெறுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் அஞ்சலி, அமானுஷ்யத்தின் மீது நம்பிக்கையில்லாமல், அனுஷ்காவுக்கு யாரோ உதவுவதாக நினைக்கிறார். அதன்படி நடத்தப்படும் விசாரணையில் மாதவன் யார், அனுஷ்கா தான் இந்தக் கொலையை செய்தாரா என்பதெல்லாம் விளக்கப்படும் என டிரெய்லர் மூலம் தெரிகிறது.
எடிட்டிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு என டிரெய்லரின் மூலம் நல்லதொரு திரைப்படம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையை கொடுக்கின்றனர். அஞ்சலியை மட்டுமே முழுக்க முழுக்க கொண்டு வெட்டப்பட்டிருக்கும் இந்த டிரெய்லரில் அனுஷ்கா, மாதவன் ஆகியோரின் பங்களிப்பு அதிகம் இல்லை. ஆனால், அவர்களது குணாதசியங்களை வெளிக்காட்டியிருப்பதன் மூலம், இந்த கேரக்டரை திறமையான கலைஞர்களான அவர்கள் இருவரும் எப்படி கையாண்டிருப்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது இந்த டிரெய்லர்.
**-சிவா**
�,”