பிறந்தநாளில் வெளியான அனுஷ்காவின் புதிய பட தகவல்!

Published On:

| By Balaji

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7), சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான ‘UV கிரியேஷன்ஸ்’ அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது.

காணொலி ஒன்றின் வாயிலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், ”2013-ம் ஆண்டு மிர்ச்சி திரைப்படத்தில் “அழகு ராணி”-யாக நமது உள்ளங்களை கொள்ளை கொண்டார் அனுஷ்கா. 2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார்.

தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் UV கிரியேஷன்சும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். அனுஷ்காவின் 48-வது படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு.பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில்

தொடங்கவுள்ளது மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UV கிரியேஷன்ஸ், அனுஷ்கா கூட்டணியில் உருவான பாகமதி எவ்வாறு நான்கு மொழிகளில் வெளியானதோ, அதே போல் இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அனுஷ்காவின் பிறந்தநாளான இன்று திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel