nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதுமுக நடிகை!

Published On:

| By Balaji

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகப் போகும் புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் பொன்ராம்.

இவர் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இளம் நடிகை அனுகீர்த்தி வாஸ் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் மூலம் அவர் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.

நடிகை அனுகீர்த்தி வாஸ், கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் . கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார்.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share