டிகை ஆண்ட்ரியா நோ என்ட்ரி என்னும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவுடன் ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெயஶ்ரீ மற்றும் பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஶ்ரீதர் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அஜீஸ் இசையமைக்க, ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் முழுக்க, முழுக்க மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சி என்னும் சுற்றுலாத் தலத்தில் உருவாகியுள்ளது. சிரபுஞ்சி சுற்றுலாத் தலம் இந்தியாவின் சிறப்புமிகு இடங்களில் ஒன்று. இந்தியாவிலேயே மிக அதிகமான மழைப் பொழிவினை எதிர்கொள்ளும் பகுதி. அதன் காடுகளையும், மலைகளையும், மலைகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் குகைகளையும் இந்த படமெங்கும் நீங்கள் பார்க்கலாம்.
சுற்றுலாவுக்காக சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க் கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிக்கிறது என்பதை பரபர திரைக்கதையில் த்ரில் பயணமாகச் சொல்லும் படம்தான் இந்த நோ என்ட்ரி.
காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங்கில் வீட்டில் முரட்டு நாய்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட மனிதர்கள், நாய்களிடம் இருந்து தப்பிக்கும் சாகச காட்சிகள் படு அசத்தலாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா உண்மையில் நாய்களின் காதலர் என்பதால் படத்தில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல், மிக எளிதாக நாய்களுடன் இணைந்து நடித்துள்ளார். நாய்களுக்கு 25 நாட்கள் தொடர்ந்து சிறப்புப் பயிற்சியையும் அளித்துள்ளார்கள்.
படத்தில் பல காட்சிகள் ஹாலிவுட்டுக்கு இணையாக விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிஜி செய்யப்பட்டுள்ளது. இது தமிழில் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தைத் தரும்.
கொரோனா பரவலுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் பல தடைகளைக் கடந்து அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது என்கிறார் இயக்குநர்.
**அம்பலவாணன்**

சிரபுஞ்சியில் படமாக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் நோ என்ட்ரி!
+1
+1
+1
+1
+1
+1
+1