தமிழ் சினிமாவில் தன் வசீகரமான குரலாலும், தேர்வு செய்து நடிக்கும் படங்களாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. கடைசியாக நடிகர் விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தவர், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா’ பாடலை தமிழில் பாடியிருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போது ‘பிசாசு2’, ‘மல்லிகை’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருப்பவர் அடுத்து கடல் கன்னியாக ஒரு ஃபேண்டஸி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘துப்பாக்கி முனை’ திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் மணிரத்தினத்தின் உதவியாளர்.
இந்த படத்தில் ஆண்ட்ரியாவுடன் சுனைனா, முனீஷ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். ஃபோக்கஸ் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். சென்னை, திருச்செந்தூர், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் பிப்ரவரிக்குள் படப்பிடிப்பு முடிந்து இந்த வருடம் சம்மர் ரிலீஸாக படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தயாராகும் முதல் கடல்கன்னி தொடர்பான ஃபேண்டஸி கதை இது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**
�,