_பாடகருடன் அமலா பால் ரகசிய திருமணம்?

Published On:

| By Balaji

நடிகை அமலா பால், மும்பையை சேர்ந்த பாடகர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதாக சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம்வருகின்றன.

நடிகை அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிறிது நாட்களிலேயே அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர். பின்னர் இயக்குநர் விஜய் மறுமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அமலா பால் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்? அவர் யாரையேனும் காதலிக்கிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. துணிச்சலான பல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அமலா பால் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இதற்கு இடையே அவர் ஒருவரைக் காதலித்துவருவதாக சில தகவல்கள் வெளியானது. எனினும் அந்த நபர் யார் என்பது குறித்த எந்தவொரு விவரத்தையும் அமலாபால் வெளியிடவில்லை.

இந்தநிலையில் இந்தி பாடகரான புவனிந்தர் சிங் என்பவர் அமலாபாலைத் திருமணம் செய்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில புகைப்படங்களை வெளியிட்டார். அந்தப்பதிவில் ‘Wedding Throwback’ என்ற வார்த்தைகளையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் புகைப்படம் வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நிஜமாகவே இருவரும் திருமணம் செய்துகொண்டனரா? அல்லது ஏதேனும் ஃபோட்டோ ஷூட்டுக்காக இந்தப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும் தான் திருமணம் செய்துகொண்டதாக அமலாபால் தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share