5பாடகரானார் அலெக்ஸ்!

Published On:

| By Balaji

:

தனது குரலாலும், அந்தக் குரலின் மூலம் வெளிப்பட்ட சொற்களின் நகைச்சுவையாலும் தமிழ்நாட்டையே சில வாரங்களுக்கு கட்டிப்போட்டவர் அலெக்ஸ். இவரது அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் நிகழ்ச்சி வெளியானது இணையதள ஸ்ட்ரீமிங் தளமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கும் அனைவராலும் பார்க்கப்பட்டது. அதற்கு முன்பே சுவாரசியமான பல நிகழ்ச்சிகளை அலெக்ஸ் நடத்தியிருந்தாலும், ஓவர் நைட் சென்சேஷன் என்பார்களே அதுபோல தமிழகம் முழுவதும் பரவினார். அதன்பின் அவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் நடைபெறாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது.

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாராளப் பிரபு திரைப்படத்தின் ‘மாட்டிக்கிட்டான் ராசா மவன்’ என்கிற பாடலை அலெக்ஸ் பாடுகிறார். தாராள பிரபு திரைப்படம், உயிரணுக்களை தானமாகக் கொடுக்கும் ஹீரோவுக்கு பின்னாளில் ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையாக அணுகிய ‘விக்கி டோனர்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக். முழுவதும் நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தப்படத்தில் ஹீரோ பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் சூழலில் வரும் ஒரு பாடலை அலெக்ஸ் பாடியிருக்கிறார் என்ற தகவலை ஹரிஷ் அறிவித்திருக்கிறார்.

எத்தனையோ பாடல்களை அலெக்ஸ் இதுவரை பாடியிருந்தாலும், அதிகாரபூர்வமான பாடகராக இந்தப்படத்தின் மூலம் தான் அறிமுகமாகிறார். அலெக்ஸ் பாடியுள்ள அந்தப்பாடல் நாளை(29.02.2020) காலை 11 மணிக்கு வெளியாகிறது.

**-சிவா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share