வைரலாகும் அஜித் குடும்ப புகைப்படம்- பின்னணி என்ன?

Published On:

| By admin

அஜித், ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது.

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் நேற்று. இதனை முன்னிட்டு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் இதில் முழுக்க முழுக்க ஸ்டைலிஷான லுக்கில் உள்ளார். ஹெச். வினோத்துடன் இணையும் அடுத்த படத்திற்கான தோற்றம் இதுதான் என முன்பு அஜித்தின் புகைப்படம் ‘வலிமை’ வெளியீட்டு சமயத்தில் வந்தது. அதே லுக்கில்தான் தற்போதும் அஜித் உள்ளார்.

‘மங்காத்தா’, ‘பில்லா’ போன்று எதிர்மறை தன்மையுடன் இருக்ககூடிய கதை ‘அஜித்61’. இதனால் நீண்ட நாட்கள் கழித்து அஜித்தை ஆண்டி ஹீரோவாக பார்க்க ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்த படத்திற்காக 25 கிலோ வரை அஜித் எடைக்குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம். இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் ஹெச்.வினோத் விஜய் சேதுபதியுடன் இணைய உள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்கு பிறகு ஹெச். வினோத் அஜித் போனிகபூர் கூட்டணி மூன்றாவது முறையாக அஜித்தின் 61வது படத்தில் இணைகிறது. ‘வலிமை’ படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் தவிர்த்து சார்ம் லுக்கில் வலம் வந்த அஜித் அடுத்த படத்திற்காக முழுக்க முழுக்க வெள்ளை முடியுடன் ஸ்டைலிஷான தோற்றத்தில் எடை குறைத்து வர இருக்கிறார். ‘வலிமை’ படத்தின் வசூல் 100 கோடியை இந்தியா முழுக்க வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share