aAK61 – இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்

Published On:

| By admin

நடிகர் அஜித்தின் 61ஆவது படத்துக்கான பூஜை தொடங்கியது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்துக்குப் பிறகு போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக தனது 61ஆவது படத்துக்காக இணைகிறார்.
இந்தப் படத்தின் பூஜை நேற்று (ஏப்ரல் 11) போடப்பட்டு படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. இதைப் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரபூர்வமாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.

‘வலிமை’ திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்த அஜித் இதில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஹெய்ஸ்ட் தொடர்பாக நகரும் இந்தக் கதையில் ஒரு கதாபாத்திரத்தில் நெகட்டிவ் ஷேடும் அஜித்துக்கு இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு நடிகை தபுவும் அஜித் படத்தில் இணைகிறார். ஆனால், அஜித்துக்கு, தபு ஜோடி இல்லை எனச் சொல்லப்படுகிறது. அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் பரிசீலனை பட்டியலில் இருக்கிறார்கள்.
கடந்த முறை ‘வலிமை’ படத்துக்கு பின்னணி இசை மட்டும் அமைத்த ஜிப்ரான் இந்த முறை ‘அஜித் 61’க்கும் இசையமைக்கிறார். அனுவர்த்தன் ஆடை வடிவமைப்பாளர். இந்த முறையும் திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சியில் கவனம் செலுத்துகிறார்.
ஹைதராபாத்தில் நடைபெறும் ஷூட்டிங்கில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஜெமினி மேம்பாலத்தை செட் போட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share