`இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினி

Published On:

| By admin

இசையமைப்பாளர் இளையராஜாவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த்தின் மகளுமான ஐஸ்வர்யா நேற்று இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா இயக்கும் அடுத்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி உள்ளது. இளையராவை சந்தித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா பகிர்ந்து, ‘எனது திங்கள் கிழமை மதியம் இசையால் நிரம்பி இருக்கிறது. இளையராஜாவுடன் நேரம் செலவிடுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தான்’ என குறிப்பிட்டு ‘வொர்க் மோட் ஆன்’ எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ‘பயணி’ என்ற மியூசிக்கல் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். இதனை அடுத்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு இயக்கத்திற்கு மீண்டும் வந்திருக்கிறார். பாலிவுட்டில் அவர் இயக்குநராக அறிமுகமாகும் ’ஓ சாதி சால்’ என்ற படம் குறித்த அறிவிப்பை சிறிது நாட்களுக்கு முன்பு வெளியிட்டார் ஐஸ்வர்யா. மேலும், சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து அந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார் ராகவா லாரன்ஸ். அவரது ‘ருத்ரா’ படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் என செய்தி வெளியான நிலையில், அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐஸ்வர்யா தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

கொரோனாவுக்கு பின்பு உடல் நிலையில் தேறி இருக்கிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் சிறிது உடல் நல குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துள்ளவர் இப்போது உடற்பயிற்சி, புத்தகங்கள், மகன்களுடன் நேரம் செலவிடுவது, இயக்கம் என பிஸியாக உள்ளார்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share