சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம் டீசர்!

Published On:

| By Balaji

நாடக காவலர் என போற்றப்பட்ட நடிகர் ஆர்.எஸ்.மனோகர் நடிப்பில் 1960ல் வெளியான படம் கைதி கண்ணாயிரம். தலைமுறை கடந்தும் அந்தப் படத்தின் தாக்கம் இப்போதும் இருக்கிறது.

அதனால்தான் நடிகர் சந்தானம் நடிக்கும் படத்திற்குக் காலத்திற்கு ஏற்ப ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’என பெயர் வைத்திருக்கிறார்கள், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஸ்வரூப் இயக்கத்தில் கடந்த 2019-ல் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா’ படத்தினை ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படமாக ரீமேக் செய்து நடித்து வருகிறார் நடிகர் சந்தானம்.

இப்படத்தினை ‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் முதல் பார்வையை ஏற்கனவே வெளியிட்டிருந்த படக்குழு, சந்தானம் பிறந்தநாளையொட்டி ஜனவரி 21ஆம் தேதி டீசரை வெளியிட்டிருக்கிறது.

துப்பறியும் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கண்ணாயிரம் என்ற டிடெக்டிவாக வருகிறார் சந்தானம். ”தொலைச்சதைத் தேடி அலையவேணாம், எந்தக் கேஸா இருந்தாலும் இழுத்துபோட்டுத் தாங்கிக்குவாரு. எவ்ளோ காசுக் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிக்குவாரு. அவர்தான் எங்கண்ணன் கண்ணாயிரம்.. கண்ணாயிரம்.. கண்ணாயிரம். இவருக்கு கண்கள் ஆயிரம்” என்று எக்கோவுடன் பின்னணி குரல் ஒலிக்க சந்தானமோ தடுக்கி விழுந்து பார்ப்பவர்களை கலகலப்பூட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறார்.

நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்கேற்றவாறு யுவனின் பின்னணி இசையும் பலம் சேர்க்கின்றன.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share