கங்குலியின் சூப்பர் சீரிஸ்: எதிர்ப்பு கிளம்பியது!

Published On:

| By Balaji

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்கள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் டாப்பில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு அணியை இணைத்து சூப்பர் சீரிஸ் என்னும் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தலாம் என்று ஒரு திட்டத்தை கோரிக்கையாக ஐசிசி நிர்வாகத்திடம் வைத்திருந்தார். பிசிசிஐ தலைவர் இடத்திற்கு போட்டியிடும் போதே தன்னுடைய அறிக்கையில், உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் பங்கை உயர்த்துவேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இந்த சூப்பர்சீரிஸ் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் வெறும் நான்கு நாடுகளை மையமாக கொண்டு நடத்தப்படும் இப்போட்டியினால் பிற நாடுகளிடையே பிரிவினை ஏற்படலாம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நிபுணர்களை நேரில் சந்தித்த பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜே ஷா ஆகியோர் ‘இந்தத் திட்டம் நிறைவேறினால் வரும் 2021 ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தத் தொடரை நடத்தலாம்’ என்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு, கங்குலி மீது பெரும் நம்பிக்கை இருக்கிறது. இவர் இந்த சூப்பர் சீரிஸ் தொடருக்கு ஒரு ஆரம்ப நிலையாக தான் இந்த திட்டத்தை வைத்துள்ளார். இதனை இன்னும் மேம்படுத்துவார் என நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறது.

இதுகுறித்து இன்னும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாத நிலையில், அடுத்த மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்காக இந்தியா வரவிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரவரிசை பட்டியலிலும் பாகிஸ்தான் அணி பின்தங்கியிருப்பதால் இயல்பாகவே அவர்களால் இந்த சீரீஸில் இடம்பிடிக்க முடியாது. இந்தியாவின் முன்னெடுப்பால் இந்த போட்டி கைகூடினால், அதில் பாகிஸ்தான் அணி மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி்யுள்ளனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share