�
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கான நிர்வாக குழு பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாக குழுவுக்கான தேர்தல் 2022 ஜனவரி 23ஆம் தேதி நடக்க இருக்கிறது.
கடந்த மாதம் நடந்த பொதுக்குழுவில் இதற்கான தேர்தல் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருடன், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இறுதி வேட்பாளர் பட்டியல் 12ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் ஆர்.கே.செல்வமணியும், கே.பாக்யராஜும் தனித்தனி அணி அமைத்து போட்டியிடுகிறார்கள்.
நீண்டகாலமாக தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தில் தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியை எதிர்த்து திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க காரணமாக இருந்த, அந்த சங்கத்தின் தலைவராக பணியாற்றிய இயக்குநர் கே.பாக்யராஜ் முதல்முறையாக தமிழ்நாடு இயக்குநர்கள் சங்க தலைவராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
**-இராமானுஜம்**
�,