தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் 2016ம் ஆண்டு அறிமுகமானவர் யாஷிகா. ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கழுகு2’ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா பலத்த அடியுடன் மருத்துவமனையில் சேர்ந்தார். சில மாதங்கள் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டு வந்தார். பழையபடி படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
இவருக்கும் ‘பிக்பாஸ்’ போட்டியாளரான நிரூப்பிற்கும் ஏற்கனவே காதல் இருந்து இப்போது இருவருமே ரிலேஷன்ஷிப்பில் இருந்து விலகி இருக்கிறார்கள். இதனை இருவருமே வெளிப்படையாக தெரிவித்தும் இருக்கிறார்கள். மேலும் திருமணம் குறித்து யாஷிகாவிடம் கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் அதை பற்றிய எண்ணம் இப்போதைக்கு இல்லை என மறுத்து வந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று திடீரென தனது இன்ஸ்டா பக்கத்தில் , ‘எனது பெற்றோர் சம்மதத்துடன் எனக்கு திருமணம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி. இது எனக்கு வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கான நேரம். எனக்கு சினிமா மிகவும் பிடிக்கும். எங்கிருந்தாலும் உங்களை நான் சினிமா மூலம் மகிழ்விப்பேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். காதல் எல்லாம் ஒத்து வராது. உங்கள் அனைவருடைய ஆசிர்வாதமும் எனக்கு வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.
திருமணம் வேண்டாம் என்றவர் திடீரென்று திருமணம் என அறிவிக்க காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் இன்னொரு பக்கம் வாழ்த்தும் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து தான் இவ்வாறு அறிவித்ததற்கு என்ன காரணம் என்பதை யாஷிகா தெரிவித்து இருக்கிறார். நேற்று ஏப்ரல் 1ம் தேதி . இதை தெரிந்து கொண்டு அப்படியே விட்டவர்களுக்கு நன்றி. அது தெரியாமல் காரணம் கேட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி என ஜாலியாக யாஷிகா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த பத்து வருடத்திற்கு தனக்கு திருமணம் கிடையாது எனவும் சொல்லி இருக்கிறார் யாஷிகா.
**ஆதிரா**