பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடித்துவந்த நடிகை த்ரிஷா, கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
தெலுங்கின் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘ஆச்சார்யா’ என்ற திரைப்படத்தில் த்ரிஷா நடித்துவந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தான் அந்தப்படத்தில் இருந்து விலகுவதாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sometimes things turn out to be different from what was initially said and discussed.Due to creative differences,I have chosen not to be part of Chiranjeevi sirs film.Wishing the team https://t.co/sfaMfRrWmT my lovely Telugu audiences-hope to see you soon in an exciting project.
— Trish (@trishtrashers) March 13, 2020
அவர் தனது டிவிட்டர் பதிவில், “**சில சமயங்களில் ஆரம்பத்தில் சொல்வது ஒன்று பின்னர் நடப்பது வேறொன்றாக இருக்கிறது. படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நான் சிரஞ்சீவி சார் படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என அன்பான தெலுங்கு ரசிகர்களுக்கு – உங்களை வேறு ஒரு சிறந்த படம் மூலமாக விரைவில் சந்திக்கிறேன்**” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்பதிவு த்ரிஷா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. த்ரிஷா அந்த படத்தில் இருந்து விலகியதால் மற்ற சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.
த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன், பரமபதம் விளையாட்டு, ராக்கி, கர்ஜனை போன்ற திரைப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”