சீரியல் நடிகையாகும் த்ரிஷா

Published On:

| By Balaji

நடிகை த்ரிஷா தெலுங்கில் தயாராகும் ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த வெப் சீரிஸை அவினாஷ் கொல்லா என்னும் கலை இயக்குநர் தயாரிக்கவிருக்கிறார். இவர் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கலை இயக்குநர்களில் ஒருவர். இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம்.

பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த வெப் சீரிஸின் கதையைக் கேட்டவுடன் த்ரிஷா, இதில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். க்ரைம், த்ரில்லர் சப்ஜெக்ட்டில் இந்த சீரிஸ் எடுக்கப்படவுள்ளது. சூர்யா வெங்கலா என்ற இயக்குநர் இந்த சீரிஸை இயக்கவுள்ளார். சக்திகாந்த் கார்த்திக் இசையமைக்கிறார்.

த்ரிஷாவுடன் சாய் குமார், ஆம்னி, இந்திரஜித் சுகுமாரன், ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். இந்த சீரிஸின் தொடக்க விழா விஜயதசமி நாளன்று நடந்தது.

மேலும் ஒரு கன்னட படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாகவும் த்ரிஷா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் பவன் இயக்கவுள்ளார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share