dகவர்ச்சியில் போட்டி போடும் நடிகைகள்!

entertainment

திரையுலகில் படவாய்ப்புக்காக, தற்போது பல நடிகைகள் கவர்ச்சிகரமான போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படம் மூலம் பரத்துக்கு ஜோடியாக ஹரி இயக்கத்தில் அறிமுகமானார். பின்னர் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் வரை கட்டுக்கோப்பாக காணப்பட்ட பூனம் பஜ்வா கதாநாயகியாக நடிப்பதற்கான உடல் அமைப்பு மாறி சற்று குண்டானார்.

சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா மற்றும் ஜி.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். உடல் எடை கூடி காணப்பட்டதால் இவருக்கு சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது தீவிரமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைந்துள்ளார். தனது தொடக்ககால உடல் அமைப்புக்கு இருந்தபோதிலும் புதிய பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அதனால் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை இயக்குனர்களுக்கு அனுப்பி வருவதுடன் சமூகவலைத்தளங்களில் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகிறார். அதனின் உச்சகட்டமாக தற்போது பிகினியில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இவரைப் போன்றே இந்தி சினிமாவில் அறிமுகமான நிதி அகர்வால் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். தென்னிந்திய மொழிகளில் வேகமாக வளர்ந்து வரும் இவர் தமிழில் ஈஸ்வரன், பூமி என 2 படங்களில் நடித்தார். தற்போது உதயநிதியுடன் நடித்து வருகிறார். தமிழில் ரசிகர்களிடம் இவருக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க நிதி அகர்வால் ஒப்பந்தமாகி வருகிறார். இந்த நிலையை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இருக்கும் நிதி அகர்வால், தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

**-இராமானுஜம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *