இளைஞர்களின் கனவுக் கன்னியாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நடிகை சிம்ரன் அதற்கு எதிர்மறையாக 2003ஆம் ஆண்டு சோனு சூட் ஜோடியாக கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் நடித்த படம் ‘கோவில்பட்டி வீரலட்சுமி’. 19 வருடங்களுக்குப் பின்பு அதேபோன்ற கதாபாத்திரம் அல்லது தோற்றத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார் என எண்ண தோன்றும் வகையில் இருக்கிறது மகான் படத்தில் சிம்ரன் தோற்றம்.
‘மகான்’ படத்தில் சிம்ரன் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் மகான் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஓடிடி தளத்தில் ‘மகான்’ வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.
பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியான நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. நாச்சியாக நடிக்கும் சிம்ரன் வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கிறார். 2003இல் வெளியான ‘பிதாமகன்’ படத்தில் நடிகையாக சிம்ரன் நடித்திருந்தார். அதன்பின் 19 வருடங்கள் கழித்து விக்ரமும் சிம்ரனும் இணைந்திருக்கும் படம் மகான். விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**- அம்பலவாணன்**
�,