நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

Published On:

| By Balaji

பிரபல ஆங்கிலப்பத்திரிகையான போர்ப்ஸ், இந்திய சினிமாவில் இன்ஸ்டாகிராம், சமூக வலைத்தளம் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முதல் 30 சினிமா பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில், தென்னிந்திய சினிமா பிரபலங்கள்தான் அதிகமாக இடம்பெற்றுள்ளனர்

முதல்10 இடங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா 10க்கு 9.88 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தமிழ் நடிகரான சூர்யா 9.37 புள்ளிகள் பெற்று 9வது இடத்தையும், தமிழ் நடிகரான தனுஷ் 9.33 புள்ளிகள் பெற்று 13வது இடத்தையும், விஜய் சேதுபதி 9.22 புள்ளிகள் பெற்று 29வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பிரபலங்களின் பதிவுகளுக்குக் கிடைக்கும் விருப்ப எண்ணிக்கை, பதில்கள், அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, வீடியோ பார்த்தவர்கள் எண்ணிக்கை, பதிவுகள் சென்றடைந்தவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களின் சமீபத்திய பதிவுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

**முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள் பட்டியல்**

01. ராஷ்மிகா மந்தனா – 9.88

02. விஜய் தேவரகொண்டா – 9.67

03. யாஷ் – 9.54

04. சமந்தா – 9.49

05. அல்லு அர்ஜுன் – 9.46

06. துல்கர் சல்மான் – 9.42

07. பூஜா ஹெக்டே – 9.41

08. பிரபாஸ் – 9.40

09. சூர்யா – 9.37

10. தமன்னா – 9.36

மகேஷ் பாபு, ராம்சரண், தனுஷ், ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால், ராஷி கண்ணா, ரகுல் ப்ரீத் சிங், இலியானா, நானி, சாய் பல்லவி, டொவினோ தாமஸ், அகில் அக்கினேனி, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சாய் தரம் தேஜ், மாதவன், வருண் தேஜ், ஷ்ரேயா சரண், விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் முறையே 11வது இடத்திலிருந்து 30வது இடம் வரை பிடித்துள்ளனர்.

**அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share