Oநடிகை நமீதாவின் புதிய தொழில்!

entertainment

தமிழ் சினிமாவில் 2004ல் விஜய்காந்த் நடித்து வெளியான ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. கதாநாயகி, குணச்சித்திர, பாத்திரங்கள் என 34 படங்களில் மட்டுமே நடித்துள்ள நமீதா தமிழகத்தின் ஷகீலாவாகவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபின் அதிமுகவில் இணைந்தார், சில காலம் கழித்து பாஜகவில் சேர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் நமீதா.

கொரோனா ஊரடங்கு காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் புதிய திரைப்படங்களை வியாபாரம் செய்யவும், வெளியிடவும் ஓடிடி தளங்கள் பிரபலமானது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என தனித்தனி ஓடிடி தளங்களைத் தொடங்கி புதிய, பழைய படங்கள், குறும்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் இயங்கி வருகின்றன. இந்த குடிசை தொழிலில் நடிகை நமீதாவும் இணைந்திருக்கிறார்

தரமான ஓடிடி தளங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது “நமீதா தியேட்டர்ஸ்” தளம். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படங்களை ஒளிபரப்பும் முதல் ஓடிடி தளமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் முதன்மை தூதுவராக ( Brand Partner ) நடிகை நமீதாவும், நிர்வாக இயக்குநராக ரவி வர்மாவும் உள்ளனர். இதுகுறித்து நடிகை நமீதா கூறியதாவது,

“திரை உலக நண்பர்களும் மக்களும் கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த பிரபலத்தையும் பெரும் அன்பையும் அளித்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதை திருப்பி அளிக்க நினைத்தேன். பல விதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோது தான் ரவி வர்மாவைச் சந்தித்தேன். திரைப்பட தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து, பலவித கார்பரேட் வணிகங்களைச் செய்து வந்துள்ளார்.

அவர் தான் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு ஓடிடி தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவை தந்தார். புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்குத் தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது. புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். மேலும் சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளம் மூலம் தங்கள் திரைப்படங்களைத் திரையிடலாம்.

நாங்கள் இத்தளத்தைத் துவங்க ஆரம்பித்த கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் பகுதி கதைகள் திரைப்படங்களை நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிட அடுத்த மாதத்தில் ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துள்ளோம். இந்த இனிய பயணத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு இந்நேரத்தில் ரவி வர்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *