aவிதிமுறைக்கு அப்பாற்பட்டவரா ரஜினி?

Published On:

| By Balaji

நடிகை கஸ்தூரி அரசியல், சினிமா, பொது விஷயங்களில் கருத்துகளைக் கூறுவது, விமர்சனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் கட்சி சார்பற்றவராகவும் கலந்துகொள்வார் நடிகை கஸ்தூரி. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்கள் ரஜினிகாந்த் எப்போது அமெரிக்கா செல்வார், உடன் செல்லப்போவது யார், எப்போது திரும்புவார் என்று கிடைத்த இரண்டு புகைப்படங்களை வைத்துக் கொண்டு செய்திகளை வெளியிட்டு வரும் சூழலில், நடிகை கஸ்தூரி எழுப்பியுள்ள கேள்வி விவாத பொருளாக மாறும் சாத்தியம் உள்ளது.

அவர் ட்விட்டரில் எழுப்பியுள்ள கேள்வியில், கொரோனா தொற்று காரணமாக மே முதல் இந்தியர்கள் அமெரிக்கா வர அந்த நாடு தடை விதித்துள்ளது. யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படாத நிலையில் ரஜினி மட்டும் எப்படி அமெரிக்காவிற்குச் சென்றார். இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

நான் இப்படி கேட்கக் காரணம், அமெரிக்காவில் பணிபுரியும், படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்கா திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே ரஜினியின் அமெரிக்கப் பயணம் ஒரு மர்மமாக உள்ளது. ரஜினி இந்திய அரசிடம் மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்கிறார்கள். இது கவலை அளிக்கிறது. காரணம், இந்திய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கா அவரது உடம்பில் பிரச்சினை உள்ளது.

ரஜினி அங்கு சிகிச்சை பெறும் மயோ கிளினிக் இருதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை. இதைநினைக்கும் போது இன்னும் மோசமாகத் தோன்றுகிறது. தயவு செய்து ரஜினிக்கு விதிமுறைகள் பொருந்தாது என்று ரசிகர்கள் சொல்லாதீர்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share